Kamarajar Matriculation Higher Secondary School


25-01-2011
சிவகாசி, ஜன. 24: சிவகாசி இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

தொழிலதிபர் முரளி ஒலிம்பிக் ஜோதி, தேசியக் கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்துப் போட்டிகளை தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் கொடியை பள்ளித் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கதிரேசன் ஏற்றினார். பள்ளிக் கொடியை தாளாளர் அண்ணாமலையான் ஏற்றினார்.

மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவிகள் கோலாட்டம், கராத்தே சண்டை உள்ளிட்டவைகளை செய்து காட்டினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிரிஜா ராஜகுமாரி பரிசு வழங்கினார். முன்னதாக உடற்கல்வி இயக்குநர் கணேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். முதல்வர் சக்தி எழிலரசன் நன்றி கூறினார்.

News & Events