SIVAKASI WEATHER
Meera Devi - BJP - Sivakasi Assembly constituency - Election 2011

04-04-2011
சிவகாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

சிவகாசி, ஏப். 1: சிவகாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மீராதேவி வாக்கு சேகரித்தார்.

அவர் அம்மன்கோவில்பட்டி, வாணக்காரத் தெரு, தட்டுமேட்டுத் தெரு, ஆவணிநாடார் தெரு உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நான் வெற்றி பெற்றால் பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவேன். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பல்வேறு தொழில் பயிற்சி அளித்து அவர்களைப் பொருளாதாரத்தில் மேம்படச் செய்வேன். சிவகாசி பகுதியில் உள்ள நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைப்பேன் என்றார்.

பிரசாரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News & Events
top