SIVAKASI WEATHER
மகளிர் கலை விழா: ராஜபாளைய

25-01-2011
சிவகாசி, ஜன. 23: சிவகாசி அரசன்கணேசன் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற மகளிர் கலைவிழாவில், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் வெற்றி பெற்றது.

பாலிடெக்னிக்கின் மகளிர் அமைப்பு சார்பில் மகளிர் கலைவிழா 2011 நடைபெற்றது.

தென்மாவட்டங்களைச் சேர்ந்த 13 பாலிடெக்னிக் மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோலப் போட்டி, சிகை அலங்காரம், ஓவியப் போட்டி, விநாடி - வினா போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் முதலிடம் பெற்றது.

பரிசளிப்பு விழாவிற்கு முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

பாலிடெக்னிக் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஷர்மிளா ஜெயகிரகம் பரிசுகளை வழங்கினார்.

News & Events
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
top