SIVAKASI WEATHER
Sivakasi Inner Wheel Club 2011 - Marriage

06-04-2011
3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சிவகாசி, ஏப். 5: சிவகாசி இன்னர்வீல் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் கிளப் ஆப் பைரோ டவுன், பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து சிவகாசியில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தினர்.

ஆர்.தங்கவேலு-உமா, கே.அய்யனார்-சரஸ்வதி,கே.தங்கம்-வேல்விழி ஆகிய 3 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இன்னர்வீல் சங்கத் தலைவர் பபிதா தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் மகேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மணமக்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

திருமண வீட்டார்களுக்கு மதிய விருந்தும் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ராஜேஷ், கண் தான மாவட்டத் தலைவர் ஜே. கணேஷ், வட்டாரத் தலைவர் தனசேகரன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News & Events
top