Inspection by Zonal Officers - Election 2011 |
06-04-2011 வாக்குச் சாவடிகளில் மண்டல அலுவலர்கள் ஆய்வு சிவகாசி, ஏப். 5: சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை, தேர்தல் மண்டல அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் 210 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தொகுதியில் 22 மண்டல அலுவலர்கள் உள்ளனர். வாக்குச்சாவடியில் போதுமான வசதிகள் உள்ளனவா என்பது உள்ளிட்ட ஆய்வுகளை மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு 210 வாக்குச் சாவடிகளிலும் நடத்தப்பட்டது. வாக்கு இயந்திரங்கள் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் கொண்ட தாள் அச்சிடப்பட்டுவிட்டது. இந்த தாள்களை வாக்கு இயந்திரத்தில் ஒட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. |