Right for vote - Awareness programme by Policemen - Election 2011 |
07-04-2011 சிவகாசியில் கொடி அணிவகுப்பு சிவகாசி, ஏப். 6: வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை, சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தார். இதில் துணை ராணுவப்படை வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர் 600 பேர் பங்கேற்றனர். ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளில் சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் சிவகாசி கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சி.முனுசாமி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |