Meera Devi - BJP Sivakasi Assembly constituency - Election 2011 |
07-04-2011 பா.ஜ.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு சிவகாசி, ஏப். 6: சிவகாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பி. மீராதேவி, செங்கமல நாச்சியாபுரம், வெள்ளையாபுரம், கட்ட சின்னம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, திருத்தங்கல் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், நான் வெற்றி பெற்றால் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்துவேன். கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என்றார். தொகுதி பொறுப்பாளர் கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். |