Sri Kaliswari College - Sports Day 2011 |
27-01-2011 சிவகாசி, ஜன. 25: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் போட்டியை தொடக்கி வைத்தார். குத்துச்சண்டை வீரர் சி.தேவராஜன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். முதல்வர் கண்மணி கல்லூரி கொடியை ஏற்றினார். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. கராத்தே, சிலம்பாட்டம் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். விழாவில் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் சிறப்புரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழைத் தாளாளர் ஏ.பி.செல்வராஜன், குத்துச்சண்டை வீரர் வி.தேவராஜன் வழங்கினர். முன்னதாக துணை முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் ஆர்.சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குநர் பி.கிருஷ்ணவேனி நன்றி கூறினார். |