SIVAKASI WEATHER
Support ADMK - Actor Gundu Kalyanam - Election 2011

11-04-2011
விலைவாசி குறைய அ.தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் - நடிகர் குண்டு கல்யாணம்

சிவகாசி, ஏப். 10: விலைவாசி குறைய அ.தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார் திரைப்பட நடிகர் குண்டுக்கல்யாணம்.

சிவகாசி அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து அவர் சிவகாசியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மக்களுக்குப் பல சேவைகளை செய்ய ஜெயலலிதா காத்திருக்கிறார். பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது ஜெயலலிதாதான். அதைக் காப்பியடித்து விரிவு செய்து செயல்படுத்தினார் கருணாநிதி. இப்படி பல நலத் திட்டங்களை ஜெயலலிதாவைக் காப்பியடித்துத்தான் கருணாநிதி செய்து வருகிறார்.

விலைவாசிதான் உயர்ந்துள்ளது என்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டது. எனவே இந்தத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜ

News & Events
top