Singa Muthu supports ADMK - Election 2011


11-04-2011
சிவகாசியில் நடிகர் சிங்கமுத்து பிரசாரம்

சிவகாசி, ஏப். 9: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை ஜெயலலிதாவால்தான் கொடுக்க இயலும் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து கூறினார்.

சிவகாசி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து திருத்தங்கல் மற்றும் சிவகாசியில் சனிக்கிழமை அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் (படம்). அவர் மேலும் பேசியதாவது:

தமிழக மக்களை நன்கு புரிந்து வைத்திருப்பவர் ஜெயலலிதா. மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டியது வாக்காளர்களாகிய உங்களது கடமையாகும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழக வளர்ச்சிக்கு உதவும் என்பதை மறக்காதீர்கள்.

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டுகிறேன் என்றார்.

News & Events