Sucide in Pallapatti
23-04-2011 கண்மாயில் எரிந்த நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு சிவகாசி, ஏப். 21: சிவகாசி பள்ளப்பட்டி சாலையில் முருகன் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர் நாராயணன். இவரது மனைவி டிரேஸ் (56). இவர்களது மகன் கோட்டூர் குருசாமி (27). இவர் பார்வையற்றவர். பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்து வந்தார். இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடப்பிரச்னை தொடர்பாக புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இந் நிலையில், வியாழக்கிழமை காலை பாப்பன்குளம் கண்மாயில் ஓர் ஆண், ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் சடலத்தை மீட்டு விசாரித்த போது இறந்து கிடப்பது டிரேஸ், கோட்டூர் குருசாமி எனத் தெரிய வந்தது. சிவகாசி கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். |