SIVAKASI WEATHER
சங்க இலக்கியம் வாழும் நெ

28-01-2011
சங்க இலக்கியம் வாழும் நெறிமுறைகளைக் கூறுகிறது : தமிழண்ணல்

சிவகாசி, ஜன. 27:சங்க இலக்கியம் வாழும் நெறிமுறைகளைக் கூறுகிறது என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ் துறையின் முன்னாள் தலைவரான தமிழண்ணல் தெரிவித்தார்.

தமிழ் மொழி செம்மொழி ஆக்கப்பட்டுள்ளதால், உலகம் இனி தமிழ் இலக்கியங்களின் உயர்வை உணரப் போகிறது என்றும் அவர் கூறினார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் பத்துப்பாட்டும், இலக்கிய மரபுகளும் என்ற ஆய்வரங்கம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் அவர் பேசியதாவது:

சங்க இலக்கியம் என்பது வாழும் நெறிமுறைகளைக் கூறுகிறது. இதைப் படிப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 15-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் கிரேக்க, லத்தீன் இலக்கியம் பற்றி பேசினார்கள். பின்னர், சம்ஸ்கிருத இலக்கியம் குறித்துப் பேசப்பட்டது.



News & Events
top