Republic Day Celebration 2011


29-01-2011
பள்ளியில் குடியரசு தினவிழா

சிவகாசி, ஜன. 28: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜமுனாசுஜந்தா தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கிராமக் கல்விக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியை அனுசூயா நன்றி கூறினார்.

சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ரத்தினவிலாஸ் பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் முழுநேர இயக்குநர் சி.சுபாஷ்சிங் தேசியக் கொடியை ஏற்றி, மாணவர்களுக்கு இலசமாக சீருடைகளை வழங்கினார்.

இதில் பொருளாளர் என்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News & Events