Sivakasi MLA K.T.Ravindra Balaji thanked all the voters

24-05-2011
வாக்காளர்களுக்கு சிவகாசி எம்.எல்.ஏ. நன்றி

சிவகாசி, மே 21: சிவகாசி எம்.எல்.ஏ., கே.டி.ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை மாலை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ரிசர்வ் லயனில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை, சிவகாசியில் உள்ள காமராஜர், அம்பேத்கர், காந்தி, திருத்தங்கலில் உள்ள காமராஜர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு ராஜேந்திர பாலாஜி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அ.தி.மு.க. நகரச் செயலாளர் அசன்பத்ரூதீன், திருத்தங்கல் நகரச் செயலாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

News & Events