Pollution in Sivakasi


01-06-2011
சிவகாசி நகரில் சுகாதாரக் கேடு

சிவகாசி, மே 31: சிவகாசி நகரில் துப்புரவுப் பணி சரியில்லாததால் சுகாதாரக்கேடு பரவி வருகிறது என நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

சிவகாசி நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி.அசோகன் தலைமை வகித்தார். இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

அய்யப்பன்: சிவகாசியில் நான்கு ரத வீதிகளிலும் துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் குப்பை தேங்கியுள்ளது. எனவே சுகாதாரக்கேடு பரவும் அபாயம் உள்ளது.

சிவானந்தம்: பகல் நேரங்களில் குப்பைகள் அகற்றப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் பல இடங்களில் பல நாள்களாகக் குப்பை அள்ளப்படுவதில்லை. ரயில்வே பீடர் சாலையில் குப்பைத் தொட்டி சாலை அருகே உள்ளது. மாமிசக் கழிவுகளை பலர் கீழே கொட்டிவிட்டுச் சென்றுவிடு

News & Events