Guest Lecture in Ayya Nadar Janaki Ammal College Sivakasi - Tamil Department
29-06-2011 சிறப்புச் சொற்பொழிவு சிவகாசி, ஜூன் 27: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் சமூக நலப்பணிக் குழு மற்றும் முதுகலை தமிழ்த் துறை சார்பில் தன்னம்பிக்கை குறித்த சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். முனைவர் து.வெள்ளைச்சாமி வரவேற்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் ரெ.கோ.ராசு பேசியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஆதாரமே தன்னம்பிக்கைதான். நம்பிக்கை இருந்தால்தான் மனிதன் பிரச்னைகளை சந்தித்து முன்னேற முடியும். இந்த தன்னம்பிக்கையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்கப் பல நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். அறிவு சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். வெற்றியாளர்களின் சுயசரிதையைப் படித்தால் தன்னம்பிக்கை தானாக வரும் என்றார். பேராசிரியர் நயினார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சமூக நலப்பணிக் குழுப் பொறுப்பாசிரியர் சோ.முத் |