Rotary Club of Sivakasi Town - Installation Programme 2011

07-07-2011
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சிவகாசி, ஜூலை 3: ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டவுன் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவர் கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் எம்.குமரேஷ்பாபு அறிக்கை வாசித்தார். புதிய தலைவர் ஜெ.மாதவ், துணைத் தலைவர் வி.எம்.விஜய் ஆனந்த், செயலாளர் கே.மணிகண்டன், இணைச்செயலாளர் ஜி.எஸ்.கணேஷ்அரவிந்த், பொருளாளர் ஜி.வி.ஷியாம்சுந்தர் ஆகியோருக்கு சங்கத்தின் மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.பெரியண்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உதவி ஆளுநர் ஜி.வி.கார்த்திக் வாழ்த்துரை வழங்கினார்.

அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

News & Events