YES Business Meet
03-02-2011 தொழில் தொடங்க தெளிவான இலக்கு அவசியம் சிவகாசி, பிப். 2: தொழில் தொடங்க, முறையான, தெளிவான திட்ட இலக்கு அவசியம் என சென்னை கல்பாதி முதலீட்டுக் கழகத் தலைவர் எஸ். சுரேஷ் தெரிவித்தார். சிவகாசியில் இளம் தொழில்முனைவோர் பயிற்சிப் பள்ளி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நிறுவனங்களில் முதலீடு என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: தொழில்முனைவோர் பெரிய அளவிலான திட்டங்களை நினைக்க வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பித்தால் 5 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு வேண்டும். அவ்வாறு குறித்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டால், தோல்விகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தொழில் வளர்ச்சி அடைய முதலீட்டை அதிகரிக்கலாம். வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் வட்டி கிடைக்கும். நமது பணம் அப்படியே இருக்கும். ஆனால், தொழிலில் அவ்வாறு இல்லை. தொழில் வளர்ச்சி அடையும்போது சொத்துகளைக் கணக்கிட்டால் வளர்ச்சி விகிதம் தெரியும். பணத்து |