SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசு

05-10-2017
சிவகாசி பட்டாசு

வானம் பார்த்த கரிசல்காட்டு பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பிரதானம். வேறு தொழில்கள் இன்றி தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமே இந்த பட்டாசு தொழில்தான்.

1923ம் வருடம் முதன் முதலில் சிவகாசியில் பட்டாசு தொழில் துவங்கியது. வறண்ட பூமியும் அதனால் இருண்ட வாழ்க்கையும் பட்டாசு தொழிலை இருகரம் நீட்டி அரவணைத்தன. அச்சுத் தொழில், பட்டாசு தொழில், தீப்பெட்டி தயாரிப்பு, இவை மூன்றும் சிவகாசியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமான தொழில்கள்.

சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 750க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதியாகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்குத்தான் 2வது இடம்.
இப்படி வந்த வெடிகளுக்கும், தீபெட்டிக்கும் பேப்பர் தேவைப்பட்டது..... அது லேபில் ஆக பிரிண்ட் செய்யப்பட்டது. இதனால் சிவகாசி பகுதிகளில் பிரிண்டிங் கொடி கட்டி பறந்தது. இன்று அது பொருளாதார வீழ்ச்சியில் நலிவடைந்துள்ளது..

பொதுவாக பட்டாசு என்றால் சரம், பூந்தொட்டி, சங்கு சக்கரம், லட்சுமி வெடி என்று சில வகைகள் இருக்கும். ஆனால் இன்று நிறைய புதிய பட்டாசு வகைகள் வருகின்றன இப்படி புதிய பட்டாசுகளை அறிமுகபடுதுவதில் இங்கு போட்டி அதிகம். இங்கு படிக்காத விஞ்ஞானிகள் நிறைய இருக்கின்றனர்.
இவர்கள் இந்த வெடியின் மூலம் பலரின் முகத்தில் புன்னகையை வரவைக்கின்றனர் என்பது நிச்சயமான உண்மை....!!

வரும் தீபாவளிக்கு உங்களால் இயன்ற அளவு பட்டாசுகளை வாங்குவதன் மூலம் உங்கள் மகிழ்ச்சியை எங்கள் பட்டாசு நகர தொழிலாளிகளுக்கும் பகிர்ந்தளியுங்கள் தோழர்களே !!!

PC: Studio Oscar
- www.sivakasiweekly.com


News & Events
top