சிவகாசியில் வெளியூர் பேருந்துகள் நிறுத்தால் பொது மக்கள் அவதி

14-12-2017
சிவகாசியில் வெளியூர் பேருந்துகள் நிறுத்தால் பொது மக்கள் அவதி: மீண்டும் இயக்கக் கோரிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெளியூர்களுக்கு செல்லும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிவகாசியில் இருந்து நாகர்கோவில், தேனி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 6 ஊர்களுக்கு செல்லும் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் கூறியுள்ளனர். இதனால் இந்த ஊர்களுக்கு செல்லுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகவே அந்த பகுதிகளுக்கு மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் சாத்தூர் நான்கு வழிச்சாலை பல பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், விருதுநகர்-மதுரை பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் சாத்தூர் செல்ல சிரமம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.


News & Events