அரசு பள்ளியை ஹைடெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்

13-03-2018
அரசு பள்ளியை ஹைடெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்

சிவகாசி நாரணாபுரம் அரசு பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ். பாடங்களை, மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட் மூலம் டிஜிட்டல் பாடமாக மாற்றி கற்பிக்கிறார். மைக்ரோசாப்ட் ஸ்கைப் மூலம் வெவ்வேறு நாடு அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு, கற்றல் அனுபவங்களைப் பெற வைக்கிறார்.
மாணவர்கள் தனித் திறனை கண்டறிந்து , மற்ற பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப்மூலம் பகிர்கிறார்.

இதன் விளைவாக, இப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் ஜெயகுமார் 'இந்தியாவின் இளம் விஞ்ஞானி' பட்டம் பெற்று, மாஸ்கோ விண்வெளி மையம் சென்று பயிற்சியும் பெற்றார். மாணவன் கூடலிங்கம் , தென்னிந்தியா அளவில் பன்முகத்திறன் கொண்ட மாணவன் என, பி.பி.சி., மற்றும் ஹார்லிக்ஸ் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டார். இன்ஸ்பயர் விருதுக்கு ஏழாம் வகுப்பு மாணவன் கோபிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவன அப்ளிக்கேஷன் உதவியுடன்பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் கருணைதாஸ், சிங்கப்பூரில் மார்ச் 13 ல் நடக்கும் உலக ஆசிரியர்கள் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்.


News & Events