SIVAKASI WEATHER
சிவகாசியும்... பங்குனிப் பொங்கலும்...

07-04-2018
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப்ரல் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எட்டாம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. நாளை பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். 9ம் நாள் கயர்குத்து திருவிழா நடைபெறும். 10ம் திருவிழாவில் தேர் வடம் தொடுதலும், தேர் இழுத்தல் நடைபெறும்.


News & Events
top