SIVAKASI WEATHER
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

30-05-2018
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: சிவகாசி ஒன்றிய ஆணையாளர் வேண்டுகோள்

சிவகாசி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருந்தால் உடனடியாக வாட்ஸ் அப் நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்குவதற்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி், ராதாகிருஷ்ணன் எம்பி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனால் ஒன்றிய கிராமங்களில் குடிநீர் பிரச்னை இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

இருந்த போதிலும் ஆங்காங்கே ஏதாவது கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருந்தால் உடனடியாக 9486488223 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் சாட்சியாபுரத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நேரடியாகவும் மனுக்கொடுக்கலாம்.
புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் அல்லது 2 நாட்களில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். கோடை காலத்தை சமாளிக்கும் வகையில், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீட்டு குடிநீர் இணைப்புகளில், மின்மோட்டாரை வைத்து குடிநீர் எடுக்க வேண்டாம். மேலும், பொதுக்குழாய் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றில் இருந்து, நேரடியாக வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுக்கக்கூடாது. இவ்வாறு கூறினார்.


News & Events
top