சிவகாசி காளிஸ்வரி கல்லூரியில் உணவுமுறை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி

23-06-2018
காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரோக்கிமான உணவு முறைகள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

க.வாணிஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் சிவகாசி மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் இயக்குனர் ம. திலகபாமா சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசும் போது, உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, விட்டமின்கள், மாவுச்சத்து போன்ற பலதரப்பட்ட சத்துக்கள் அடங்கிய உணவுகளை சீரான முறையில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும் என்பதை விவரித்தார். தற்போதைய இளைய சமுதாயம் துரித உணவின் மேல் உள்ள மோகத்தினால் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆரோக்கிய உணவிற்கு அளிப்பதில்லை என்றும் கூறினார். மேலும் இரத்தசோகை, நீரழிவு நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆட்படுகின்றனர். உடம்பிற்கு தேவையான 1500 கலோரிகளை பற்றி நினைக்காமல் உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். நிகழ்ச்சியின் முடிவில் கனகலெட்சுமி நன்றி கூறினார்.


News & Events