சிவகாசி ரத்த வங்கியில் இருப்பு குறையும் ரத்தம்

23-06-2018
சிவகாசி அரசு மருத்துவமனைரத்த வங்கியில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.மருத்துவமனையில் ரத்த தான முகாம்கள் நடத்தியும், வழக்கமாக ரத்த தானம் செய்பவர்களிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டு வந்தது. தற்போது குறைவான யூனிட் அளவிலே ரத்த வகைகள் இருப்பு உள்ளன. தனியார் மருத்துவமனை அவசர நோயாளிகளுக்கு கூட ரத்தம் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ரத்த கொடையாளர்கள் முன்பு போல் ரத்த கொடை செய்வதில்லை. குறைந்த எண்ணிக்கையில் தன்னார்வ கொடையாளர்களும் ரத்தம் கொடுக்கின்றனர். இதனால் அரிதான ரத்த வகைகள் ஸ்டாக் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்த கொடை பெறுவதில் சிவகாசி அரசு மருத்துவமனை நம்பர் ஒன்னாக இருந்தது. தற்போது இந்நிலை மாறி உள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,' ரத்த பற்றாக்குறையை தவிர்க்க ரத்ததான முகாம் நடத்தப்பட்டு ,இதன் மூலம் அதிகளவு ரத்தம் ஸ்டாக் வைக்கப்படும்,' என்றனர்.


News & Events