சிவகாசியில் சின்ன வெங்காயம் விலை விர்ர்ர்...

07-07-2018
சிவகாசியில் சின்னவெங்காயம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.சிவகாசியில் காய்கறி மார்க்கெட்டுக்கு, மதுரையில் இருந்து பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து தினமும் டன் கணக்கில் இருக்கும். நெடுங்குளம், மங்கலம் உட்பட சிவகாசி கிராம பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து இருக்கும். கடந்த வாரங்களுக்கு முன்புவரை சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், மார்க்கெட்டில் மொத்த விலைக்கு ஒருகிலோ சின்னவெங்காயம் ரூ.25க்கும், சில்லரை விலைக்கு அதிகபட்சமாக ரூ.35வரை என குறைவாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால், சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து,

மார்க்கெட்டுக்கு சின்னவெங்காயம் வரத்து குறைந்ததுடன் அதன் விலை உயர ஆரம்பித்துள்ளது. இதில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40வரை உயர்ந்திருந்தது. தற்போது போதிய வரத்து இல்லாததால் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் ஒருகிலோ ரூ.60 முதல் அதிகபட்சமாக ரூ.65வரை என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.


News & Events