PRIDES 2018 - விளையாட்டுப் போட்டி

22-07-2018
சிவகாசி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கைப்பந்து போட்டியில் சின்மையா பள்ளியும், கால்ப்பந்து போட்டியில் சிவகாசி அரிமா பள்ளியும், கூடைப்பந்து போட்டியில் PACM பள்ளியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகளையும், சுழற்கோப்பையையும் வழங்கினர். மேலும் பள்ளியின் பொன் விழா ஆண்டினை முன்னிட்டு 50 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. PRIDES 2018 முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியினை சிவகாசி அரிமா பள்ளி முன்னாள் மாணவர்கள் 2014-2015 சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


News & Events