SIVAKASI WEATHER
தண்ணீரை நன்னீராக மாற்றும் கருவியை கண்டுபிடித்து சிவகாசி இளைஞர் சாதனை

03-08-2018
தண்ணீரை நன்னீராக மாற்றும் கருவியை கண்டுபிடித்து சிவகாசி சந்தன் ஜெயின் சாதனை. சிவகாசியில் விநியோகிக்கப்படும் தண்ணீரை வீட்டில் நன்கு காய்ச்சிய பின்னரே பயன்படுத்த முடியும். மைக்ரோபயாலஜி பட்டதாரியான சிவகாசி சந்தன் ஜெயின் இதற்கு ஒரு தீர்வு காண ஒரு புதிய கருவியை தனது ஒரு வருட முயற்சியில் கண்டுபிடித்துள்ளார். மூன்று நிலைகள் கொண்ட பில்டர் மூலமாக தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப் படும் பில்டர் செங்கல் போன்ற கல்லினால் ஆனது. இந்த கருவியை சிறிய அளவில் செய்திருப்பதால் ஒரு குடும்பத்தின் வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும். வீட்டளவில் செய்துள்ள இந்த கருவியின் விலை 1,300 ரூபாய். இதற்கான பில்டரை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது, அதுவும் வெறும் 300 ரூபாயில்.

சந்தனின் இந்த கண்டுபிடிப்புக்கு பல அமைப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

சந்தனுக்கு 8248762404 எண்ணில் உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.


News & Events
top