மலைக்க வைத்த சிவகாசி சிறுவன்

09-02-2019
மூன்றரை வயதில் 100 திருக்குறள்: மலைக்க வைத்த சிவகாசி சிறுவன்

இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிப்பதற்காக மூன்றரை வயது சிவகாசி சிறுவன் ஆர்.டி.ஓ., முன்னிலையில் 100 திருக்குறள் திருக்குறள்ஒப்புவித்தான்.சிவகாசி புகழேந்தி தெருவை சேர்ந்த சண்முகவேல், அர்ச்சனா தம்பதி மகன் யஸ்வந்த். மூன்றரை வயதான இவர் சிவகாசி எஸ்.எச்.என்.வி., மெட்ரிக்., பள்ளியில் பிரி.கே.ஜி., படிக்கிறார். இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிப்பதற்காக பள்ளியில், தினகரன் ஆர்.டி.ஓ., முன்னிலையில் பல்வேறு சாதனைகள் புரிந்தார். 100 திருக்குறளை ஒப்புவித்தார்.கார் 'லோகோ'வை காண்பித்தது என்ன கார் என்பதையும், தமிழ் ஆண்டுகள் 60, தமிழ் மாதங்கள், நாட்கள், உயிரெழுத்து, மெய்யெழுத்து, உள்ளிட்டவைகளை மனப்பாடமாக கூறினார்.மேலும் கோள்களின் பெயர்கள் , இதுவரையிலும் பதவி வகித்த இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளின் பெயர்களை வரிசையாக கூறி மலைக்க வைத்தார்.இதற்காக யஸ்வந்திற்கு இரண்டரை வயதிலிருந்தே அவருடை தாய் பயிற்சி அளித்துள்ளார்.


News & Events