SIVAKASI WEATHER
கடைப்பிடிங்க... என்றும் '16' ஆக மாறுங்க... சிவகாசி யோகா மாஸ்டர் ஞானவாணி

14-08-2019
கடைப்பிடிங்க... என்றும் '16' ஆக மாறுங்க... சிவகாசி யோகா மாஸ்டர் ஞானவாணி தரும் 'டிப்ஸ்'

சிவகாசி ஞானவாணியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவு யோகாவில் பேமஸ். சிக்கலான யோகாசனங்களையும் ஒரு நொடியில் செய்து அசத்துவார். தொடர்ந்து பல மணிநேரம் யோகா செய்து உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். வயது 50 யை கடந்தும் இன்னும் 20 ஆக உலாவருகிறார்.

யோகா பயிற்சியாளர், நடுவர் என பல முகங்கள் கொண்ட இவர், இளைதலைமுறைக்கு டிப்ஸ்களை வாரி வழங்குகிறார். அந்த வகையில் அவர் தந்த 'டிப்ஸ்' இதோ...

கட்டு மஸ்தான உடல் அமைப்பிற்காக சிலர் உணவுக்கு மாற்றாக சில செயற்கை உணவு பானங்களை எடுத்துக் கொள்கின்றனர். டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் செயற்கை உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.இளம் பெண்கள் ஒல்லியான தேகத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலதரப் பட்ட ஜீன்களை கொண்ட பெண்கள் எப்படி ஜீரோ சைஸ்சிற்கு உடலை மாற்ற முடியும். எல்லா பெண்களுக்கும் உடல் வாகு ஒன்று போல் இருக்காது. யோகாசனங்கள் செய்தால் உடல் அமைப்புகளை மாற்ற முடியும். இளைய தலைமுறைக்கு எந்த உணவு வகைகளை எங்கே எந்த அளவுக்கு சாப்பிட வேண்டும் என தெரிவதில்லை. ஓட்டல்களிலும் பாஸ்ட் புட் கடைகளிலும் சாப்பிட வேண்டாததை விரும்பி சாப்பிடுகின்றனர். சிலர் அதிக உணவை உட்கொண்டு அவதிப்படுகின்றனர். சிலர் குண்டாகி விடுவோமா என அச்சப்பட்டு உணவின்அளவை வேண்டுமென்றே குறைத்து கொள்கின்றனர். உடல் பருமனை குறைக்க அதிகப்படியான உடற்பயிற்சி செய்கின்றனர். அதிகம் சாப்பிடாதீங்கஅதிகப்படியான உடற்பயிற்சி ஆரோக்கிய பிரச்னைகளை உருவாக்கும்.

உடல் எடைக்கேற்றவாறு உடற் பயிற்சி செய்ய வேண்டும். யோகாசனங்களை காலை, மாலை இருவேளையும் செய்யலாம். முடிந்தளவு எளிதான யோகாசனங்களை முதலில் கற்றுக்கொண்டு செய்ய பழகுங்கள். அதேப்போன்று எவ்வளவு ஓய்வுவேண்டும் என்பதையும் உடல் எடைக்கு ஏற்றவாறு ஓய்வு நேரத்தையும் கணிக்க வேண்டும். ஓய்வு தசைகளுக்கு அவசியம்.

சரியான உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். உடலில் தண்ணீர் குறைவு ஏற்படாமல் பார்த்து தேவையான தண்ணீர் குடித்தல் அவசியம். உடல் எடையை குறைக்க பல்வேறு உடல் பயிற்சியும், சரியான உணவும் தான் முக்கியம். எல்லாவற்றையும் விட சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்கிறோம் என்பதற்காக உணவை அதிகம் சாப்பிடக் கூடாது.கலோரி குறைக்க ஓட்டம்குறைந்த கலோரி உள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசியுடன் இருக்கவும் கூடாது. வேளா வேளைக்கு உணவு உண்ண வேண்டும். உணவை ஒதுக்கி வைக்கவும் கூடாது. சிலர் டயட்டில் இருப்பதாக சொல்லி உணவை வேண்டாம் என்று விலக்கி விடுவார்கள். அல்லது கொஞ்சமாக சாப்பிடுவார்கள். கடைசியில் பசி கூடி வாரி சாப்பிட்டு விடுவார்கள். சரிவிகித உணவு மட்டுமே உடல் எடை குறைவதை உறுதி செய்யும்.

கலோரிகளை குறைக்க ஓட்டம், நீந்துதல் நடனம், சைக்கிள் ஓட்டுதல், இறகு பந்தாட்டம், டென்னீஸ் போன்ற விளையாட்டுகளில் விளையாடலாம். எந்த உடற் பயிற்சியை செய்தாலும் நமது நன்மைக்காக செய்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். உடற்பயிற்சி நேரங்களில் மற்ற சிந்தனை அறவை தவிர்க்க வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் என வாரத்திற்கு 6 நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இயற்கை உணவுகளை எடுத்துக் கொண்டால் கடின உடற்பயிற்சி செய்ய வேண்டாம். விளையாட்டில் ஈடுபட்டாலும் யோகா மன அமைதியை தரும். அதனால் கொஞ்ச நேரம் யோகாவிற்கு ஒதுக்குங்கள்.மன அமைதியுன் உடற்பயற்சி செய்வது உடலை இளமை யாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இதை வாழ்வில் கடைப்பிடித்தால் நீங்கள் என்றும் 16 தான்.


News & Events
top