SIVAKASI WEATHER
குப்பையில் இருந்து உரம்!

14-09-2019
குப்பையில் இருந்து உரம்! - பாராட்டுகளைக் குவிக்கும் சிவகாசி நகராட்சி

சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து நாள்தோறும் 30 முதல் 35 டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. இதில், பாதிக்கும் மேற்பட்டவை பழங்கள், காய்கறிகள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய மட்கும் கழிவுகள்தான். இந்த மட்கும் கழிவுகளை உரமாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.45.5 லட்சம் மதிப்பீட்டில், நுண் உரக்குடில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர்கள், குப்பைகளைச் சேகரித்து வந்து உரக்குடிலில் சேர்க்கின்றனர். பின்னர், அவை தரம் பிரிக்கப்பட்டு அங்குள்ள 14 தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. காய்கறிக் கழிவுகளை விரைவில் குப்பையாக மாற்றும் வகையில் ஆடு, கோழி, வாத்து, முயல் போன்ற கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவை குப்பைகளைக் கிளறிக்கொண்டே இருக்கின்றன. இதனால் அவை எளிதில் உரமாகிவிடும். மேலும், காய்கறிக் கழிவுகளை உண்டு சில மணி நேரங்களிலேயே எருவாக மாற்றித் தருகின்றன.

குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நம்ம சிவகாசி நகராட்சிக்கு நாமும் வாழ்த்துக்கள் சொல்லலாமே!


News & Events
top