SIVAKASI WEATHER
சிவகாசியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சீரழியும் அவலம்

12-11-2019
சிவகாசியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சீரழியும் அவலம்

சிவகாசி ஈஞ்சார் பகுதியில் கி.பி., 1236 ல் பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியன் காலத்துல கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் இருக்கு. மூலவராக சிவன், சக்தியாக மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், அய்யனார் போன்ற 18 சுவாமி சிலைகள் இருந்துள்ளது. ஆனால் இப்போது எந்த சிலைகளும் இல்லை. கோயிலை சுத்தி கலை நயமிக்க கல்வெட்டுகள், சித்திரங்கள், அழகோவிய சிலைகள் மட்டுமே இருக்கின்றன. திறந்த வெளியில் நந்திபகவான் இருக்கிறார். கோயிலோ எந்த வித பராமரிப்பும் இல்லாமல் கேட்பாரற்று இருக்கிறது. சுற்றியும் புதர்மண்டியும் , கோவில் மேல் முழுவதும் மரங்களா சிதலமடைந்து இருக்கிறது. சிலைகளோ துாசி படிஞ்சு பாழ்பட்டுவருகிறது. கோயில் மூலவர் சன்னதி கீழ் பாதாள சுரங்கம் இருக்குனு சொல்றாங்க. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவி ஆண்டாள் கோயில் செல்ல வழியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இங்க இருக்குற சுவாமி சிலைகள் எல்லாத்தையும் திருடிட்டினுங்க. கோவில் மூலவர் சிலைய 2017 ல திருடிட்டாங்க. நந்தி சிலைய திருடும் போது ஊர்க்காரங்க பாத்து விரட்டி அடிச்சிருக்கிங்க.

இந்த கோயிலை சுத்தி தோட்டம், ரதவீதிகள், தாமரைக்குளம் னு பேர் சொல்லுற அளவுக்கு பெரிய நகரம் இருந்திருக்கு. இப்ப வெறும் சிதலமடைஞ்ச கோயில் மட்டும் தான் இருக்கு. மன்னர், போர் காலத்துல சுரங்கம் வழியாக தப்பிக்கவும், மறைந்து வாழும் இடமாவும், பொன், பொருளை பாதுகாக்கும் இருப்பிடமாகவும் இருந்திருக்கு. ஆனா இங்கையும் சில சமூக விரோத செயல்கள் நடக்குது ( கோவில் சுத்தி குவாட்டர் பாட்டில் தான் , நம்மாளுங்க திருந்தவே மாட்டானுங்க ).

தொல்லியல் துறை சுரங்கத்தை ஆராயலாம். பழமை வாய்ந்த கோயில். இதுபோல இன்னும் பல கோவில்கள் இருக்கு. கோயிலின் புனிதத்தை காக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- RMK விஜய குமார்


News & Events
top