SIVAKASI WEATHER
பட்டாசு ஆலை உரிமையாளருடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனை

23-04-2020
பட்டாசு ஆலை உரிமையாளருடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனை

வேலையிழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குறித்தும் தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிககை எடுப்பது குறித்தும் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தினார்.

இந்தியா கொரோனா தாக்கத்தால் 21 நாள்கள் ஊரடங்கில் இருந்துவரும் நிலையில், மக்களில் பலர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தொலைத்து முடங்கியிருக்கின்றனர். அதிலும், தினக் கூலிக்கு வேலை செய்பவர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. தடை உத்தரவு காரணமாக பட்டாசு தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தடை உத்தரவு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிககை எடுப்பது குறித்தும் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பால்வளததுறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். வேலை இன்றி தவிக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது, மத்திய மாநில அரசின் துணையோடு பட்டாசு ஆலை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் சோனி கணேசன், காளீஸ்வரி குரூப் ஏ.பி.செல்வராஜன், லார்டு குரூப் ஆசைத்தம்பி, அய்ய நாடார் குரூப் அபிரூபன், காரனேசன் பயர் ஒர்க்ஸ் பாலாஜி, ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் சங்கர், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் குமரேசன், கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் விஜயகாந்த், ராஜேஸ்வரி பயர் ஒர்க்ஸ் பிரதீப், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் சண்முகநடராஜ் உட்பட ஏராளமான பட்டாசு ஆலை தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.



News & Events
top