SIVAKASI WEATHER
சிவகாசி ஊரடங்கு தளர்வு

06-05-2020
சிவகாசி ஊரடங்கு தளர்வு

கொரோனா ஊரடங்கில் சிவகாசி சிவப்பு மண்டலத்தில் உள்ள நிலையில் இன்று முதல் இதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் வழிகாட்டு முறைகள் குறித்த அறிவிப்பை கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ளார்.

தடைகள் என்ன...
* பள்ளி, கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்கள்.
* மத சம்பந்தமான கூட்டங்கள் தடை.
* அரசியல், விளையாட்டு, தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், தங்கும் விடுதிகள்.
* வாடகை கார்கள், ஆட்டோக்கள் .
* இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
* திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் .
* குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள், ஷோரூம்கள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள்.
* டீ கடைகள், சலுான் , அழகு நிலையங்கள்

தடை இல்லாதவை...
* அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி.
* ஓட்டல்கள்(பார்சல் மட்டும்) பேக்கரிகள் காலை 6:00 முதல் இரவு 9:00 மணி.
* ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமான பொருட்கள், மின்சாதன கடைகள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி.( துணை ஆட்சியர் நிலை அலுவலர் அனுமதியோடு)
* அலைபேசி, கம்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் வாகனங்கள், கண் கண்ணாடிகள் தொடர்பான கடைகள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி . ( தாசில்தார் அனுமதியோடு )
* பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள் தொழிலாளர் உதவி ஆணையர் அடையாள அட்டையுடன் பணி செய்யலாம்.
கட்டாயம் தேவைகள்...
* கடைகளின் நுழைவு பகுதியில் வாடிக்கையாளர்கள் கை கழுவ வசதி .
* மாஸ்க் அணிந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி .
* கடை வெளியே சமூக இடைவெளி கோடுகளுடன் உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
* விதிகள் மீறப்பட்டால் கடை அனுமதி ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும்.
அச்சகங்கள் ...

* அனைத்து பகுதி அச்சக தொழிலகங்கள் 50 சதவீத தொழிலாளர்கள் அதாவது 20 நபர்களுடன் இயங்க அனுமதி.இதற்கான விபரங்களை சிவகாசி சப் கலெக்டர்அலுவலகத்தில் தெரிவித்து இயக்கலாம்.
* நகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி இல்லை. ஊரக பகுதி ஆலைகளுக்கு அனுமதி.
* நகராட்சி பகுதி ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் கலெக்டர்அனுமதியுடன் செயலபடலாம்.

-பட்டாசு ஆலைகள் இயங்குவது எப்படி...
* நகர் பகுதி பட்டாசு ஆலைகள் இயங்க அனுமதி இல்லை.
* ஊரக பகுதியில்50 சதவீத தொழிலாளர்களுடன் ஷிப்ட் முறையில் பணி.
* ஆலை இடம், உரிமம், பணியாளர் எண்ணிக்கை, எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள் விவரம், வாகன விவரங்களுடன் சிவகாசி தனி தாசில்தார்(தீ.தொ.ஆ.,) அலுவலகத்தில் தகவல் தெரிவித்து இயக்கலாம். தொழிலாளர்கள், வாகன அடையாள அட்டைகளை கலெக்டர்
அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
* தீப்பெட்டிஆலைகள் நகர், கிராம பகுதிகளில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதோடு பட்டாசு ஆலைக்கான விதிகளே இதற்கு பொருந்தும்.


News & Events
top