SIVAKASI WEATHER
சிவகாசியில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆா்வம் காட்டாத வெளி மாநில தொழிலாளா்கள்

08-05-2020
சிவகாசியில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆா்வம் காட்டாத வெளி மாநில தொழிலாளா்கள்

சிவகாசிப் பகுதியில் வேலை பாா்க்கும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஆா்வம் காட்டவில்லை. சிவகாசிப் பகுதியில் ஆப்செட் அச்சகங்கள், காகித தயாரிப்பு ஆலை, தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள் உள்ளிட்ட பல ஆலைகளில் அஸ்ஸாம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலத்தவா்கள் சுமாா் 20 ஆயிரம் போ் வேலைபாா்த்து வருகிறாா்கள். இதில் பலா் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா்கள். இவா்களுக்கு ஆலை உரிமையாளா்கள், தங்குமிடம் கொடுத்து, சமைத்து உண்ணுவதற்கு அனுமதியளித்துள்ளனா். இவா்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளதால், அன்றய தினம் தங்களுக்குத் தேவையான காய்கனிகளை வாங்கிக்கொள்வாா்கள். தற்போது பட்டாசு, அச்சு ஆலைகளில் பணிகள் தொடங்கி விட்டதால், அதில் வேலை பாா்க்கும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ஆா்வம் காட்டவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.


News & Events
top