SIVAKASI WEATHER
வயற் கூடையுடன் வேலைக்கு வேகமாகப் போகிறாள் பட்டாசுத் தொழிற்சாலைப் பெண்

20-05-2020
வயற் கூடையுடன் வேலைக்கு வேகமாகப் போகிறாள் பட்டாசுத் தொழிற்சாலைப் பெண்

சிவகாசியிலிருந்து திரு.கருமுருகானந்தராஜன் எழுதுகிறார்;

பலரது இயல்பு வாழ்க்கையில் கபடி ஆடி இருக்கிறது கொரனா பெருந்தொற்று.

பொருளாதாரப் பூதத்தின் பேயாட்டத்தில் இழுத்துப் பிடித்து வைத்திருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் கரையத் தொடங்கியிருக்கிறது.

இனி வரும் காலத்தில் உழைக்கப்போவதெல்லாம் இதுவரை வாங்கிய கடன்களை அடைப்பதற்காகவே இருக்கப்போகிறது என்ற யதார்த்தம், புலம் பெயர் தொழிலாளர்களின் பாதங்களைப் போல வலி மிகுந்தது.

வீட்டுவாடகை, பள்ளிக் கட்டணம், இரக்கமற்ற EMI வட்டி என அனைத்தும் துரத்த வயற் கூடையுடன் வேலைக்கு வேகமாகப் போகிறாள் பட்டாசுத் தொழிற்சாலைப் பெண் ஒருத்தி. ஐம்பது சதவீத பணியாளர் பட்டியலில் தன் பெயரும் இடம் பெற்று விட்ட பெருமகிழ்வில்.

வாழ்வின் பொருளாதாரப் பிழைகளை பொடதியில் அடித்து உணர்த்தியிருக்கிறது காலம்.

நுகர்வு வெறி தெறித்து விழும் புள்ளியில் தொடங்கும் எதிர்காலத்திற்கான வைராக்கியம்.

- www.sivakasiweekly.com


News & Events
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
top