சிவகாசி பொத்தமரம் ஊரணியை மீட்போம்

23-05-2020
சிவகாசி பொத்தமரம் ஊரணியை மீட்போம்

சிவகாசி பேருந்து நிலையம் அருகில் உள்ள பொத்தமரம் ஊரணி, ஒரு காலத்தில் சிவகாசியின் நீர் ஆதாரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் தற்போது இது முட்புதராக, பிளாஸ்டிக், குப்பை மற்றும் கழிவுகளால் நிரப்பப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது. நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கிய நீர்நிலையை நாம் சீரழித்து விட்டோம். நம் முன்னோர் நீருக்கு மதிப்பளித்து, அதை சேமிக்க பல்வேறு வழிகளை கையாண்டது போன்று, நாமும் நீரை பற்றிய விழிப்புணர்வை பெறவில்லை எனில் வருங்கால சந்ததி வாழ முடியாது. சிவகாசியில் நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில்களில் மட்டும் தான் நீரை பார்க்க நேரிடும். இதை தூர்வார யாரேனும் உதவினால் மிக உதவியாக இருக்கும்.

படம்: திரு. உத்தண்ட ராமன்

- www.sivakasiweekly.com


News & Events