சிவகாசியில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்

23-05-2020
- திரு. வினித் குமார்

சிவகாசியில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்

நேற்று சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. நேற்று மாலை 05:10 மணி முதல் 06:00 மணி வரை கோடை மழை போல் இடி மின்னல் இல்லாமல் பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரம் தென்மேற்கு பருவ மழை நீடித்தது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். சிவகாசியில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது, இது சிவகாசியில் மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


News & Events