SIVAKASI WEATHER
சிவகாசியில் தில்லியிருந்து வந்த 13 பேருக்கு கரோனா தொற்று

25-05-2020
சிவகாசியில் தில்லியிருந்து வந்த 13 பேருக்கு கரோனா தொற்று

தில்லியிருந்து வந்தவா்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா். வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பலாம் என அரசு அறிவித்ததை அடுத்து தில்லியில் வேலை செய்து வந்த விருதுநகா் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டத் தொழிலாளா்கள்172 போ் சிறப்பு ரயில் மூலம் திருநெல்வேவி வந்தனா்.

பின்னா் அவா்கள் மே 18 ஆம் தேதி பேருந்து மூலம் சிவகாசி வந்து, சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள பாலிடெக்கினிக்கில் தனிமைப்படுத்தப்பட்டனா். தொடந்து, முதல்கட்டமாக அவா்களில் 60 பேரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பபட்டன. இதில் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

இவா்கள் ராஜபாளையம், சாத்தூா், மல்லாங்கிணறு மற்றும் மதுரையைச் சோ்ந்தவா்கள் என சுகாதாரத்துறையினா் கூறினா். இவா்கள் சிவகாசி அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் தயாா்நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் முதல் முதலில் சிவகாசி அரசு மருத்துமவனையில் கரோனா தொற்று உள்ளவா்கள் சிகிசைக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மேலும் தில்லியிருந்து வந்தவா்களின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்."

News & Events
top