SIVAKASI WEATHER
சிவகாசி நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

16-07-2020
சிவகாசி நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க வெளியில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணியவேண்டும், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என சிவகாசிநகராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு கடந்த சில நாட்களாக நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர்சித்திக், சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, சிவகாசி நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து இதுவரை ரூ.30 ஆயிரம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளை பொதுமக்களும், வியாபாரிகளும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


News & Events
top