SIVAKASI WEATHER
சிவகாசி கோவில்களில் நவராத்திரி கொலு நிகழ்ச்சிகள் ரத்து

23-10-2020
சிவகாசி கோவில்களில் நவராத்திரி கொலு நிகழ்ச்சிகள் ரத்து

சிவகாசி சிவன் கோவில், கடைக்கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், காய்ச்சல்கார அம்மன் கோவில்களில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து வணங்குவார்கள். சிவன் கோவிலில் 9 நாட்களும், நவராத்திரி குறித்து சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். வீணை கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் நவராத்திரியின் 9 நாட்களும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனைத் தவிர பெரும்பாலான வீடுகளிலும் கொலு வைத்து பூஜைகள் நடைபெறும். அக்கம்பக்க வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் பூஜைகளில் கலந்து கொள்வார்கள். பூஜை முடிவில் தினமும் ஒரு பிரசாதம் வழங்குவார்கள். இந்த ஆண்டு வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கோவில்களில் கொலு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று அச்சம் காரணமாக, பெரும்பாலான வீடுகளிலும் இந்த ஆண்டு கொலு நிகழ்ச்சிகள் நடக்காத நிலையே உள்ளது. களைகட்டும் கொலு நிகழ்ச்சிகள் இல்லாதது பக்தர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


News & Events
top