கனவு கண்டேன்

07-02-2021
சிவகாசியிலிருந்து ZàÄ«n Rýàñ எழுதுகிறார்;

கனவு கண்டேன்...

1) திருத்தங்கலில் இருந்து சிவகாசி நுழைகையில் Welcome to Little Japan என்ற ஆர்ச் மக்களை வரவேற்றது..

2) சாத்தூரில் இருந்து வரும் போது சாலையின் நடுவே சிமெண்ட் டிவைடர்கள் சாலையில் அழகாக இருந்தது..

3)சிறுகுளம் கரை பகுதி நடைமேடை அமைத்து அழகு செடிகளால் சிறு சிறு சிற்றுண்டி கடைகளால் மிக அழகாக இருந்தது...

4)இதுவரை இரயில் பயணம் என்றாலே திருத்தங்கல் செல்லும் மக்கள் இரயில் நிலையம் அரசு மருத்துவமணை வழியாக பேருந்துகள் செல்வது அழகாக இருந்தது..

5)உள்ளூர் பேருந்துகளுக்கு என்று தற்போதைய தனி பேருந்து நிலையம் சாத்தூர் சாலையிலே வெளி மாவட்டங்களுக்கு என்று தனி பேருந்து நிலையம் (காரணம்: மதுரை Highway near)

6)பெரு மாநாகராட்சிகளில் போன்று 10₹ ஆட்டோ,வீடு தேடி வரும் OLA போன்ற கார்கள்..

7)அதிகமாக மக்கள் கிராஸ் செய்யும் இடங்களில் சிறு இரும்பு மேம்பாலம் (Bus stand, Car street...)

இப்படி எல்லாம் பல கனவு வந்துச்சி ஆனா இதலாம் எப்போன்னு தான் தோனுச்சி...

நம்ம ஊர் ஒன்னு வசதில்ல குறை கண்டது கிடையாது...நீங்க சில மாநாகராட்சி நகராட்சி பாத்திங்கனா எப்பாயாச்சுதான் விலை உயர்ந்த BMW போன்ற கார்கள் பார்க்க முடியும் ஆனா நம்ம ஊர்ல்ல மட்டு தான் தெருவுக்கு தெரு பாக்குறோம்....

நேரு நம்ம ஊருக்கு குட்டிஜப்பான்னு ஏன் பெயர் வச்சாரு எல்லாத்துக்கும் தெரியும் தொழில் நிறுவனமும் சரி கொடுக்குற வரில்லயும் சரி நம்ம ஊர அடிச்சிக்கிர சாரும் இல்ல...

நமக்கு பெருமை உண்டு ...ஆனால் சரியான. உருவம் இல்லை...

அது ஏன் தான் புரியல்ல..

கோவை,மதுரை,திருச்சி,சென்னை ன்னு நம்ம வீட்டு பசங்க படிக்க போறங்க அவுங்க கிட்ட கேட்டு பாருங்க அங்க நிலைக்கும் இங்க உள்ள நிலைக்கும்...எப்படி எல்லாம் இருக்குன்னு... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ...Cityயா மாற...

காத்திருப்போம்...


News & Events