Panguni Pongal Lite Version |
17-04-2021 Panguni Pongal Lite Version 20.21 எல்லா வருடமும் பங்குனிப் பொங்கலை Full Version ஆக கொண்டாடிய சிவகாசி மக்களுக்கு 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக கொண்டாட முடியாமல் போயிற்று. இந்த வருடம் 2021ல் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிவகாசி மக்கள் புது விதமாக Panguni Pongal Lite Version கொண்டாட இருக்கிறோம். கடந்த வாரம் எளிமையாக நடைபெற்ற கொடியேற்ற விழாவில் பக்தர்கள் 95% பேர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை சிவகாசியில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே மாஸ்க் அணிவதை கண்ட எனக்கு கொடியேற்றம் அன்று பெரும்பாலனோர் மாஸ்க் அணிந்ததை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. கோயிலில் நுழையும் முன் Thermal Scanner கொண்டு செக் செய்தும், sanitizer spray கொண்டு சுத்தம் செய்த பின்னரே பக்தர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். கோயில் நிர்வாகத்தினரும் எங்கும் எப்போதும் கூட்டம் சேராமல் பார்த்துக்கொண்டனர். மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் பங்குனிப் பொங்கலை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலிக்கும், ஆனால் இம்முறை கோயில் வளாகம், தெப்பக்குளம் மாரியம்மன் ஆகியவை மட்டுமே வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் ரசித்து பார்க்கும் பிரம்மாண்ட மின் விளக்கால் ஜொலிக்கும் அம்மனும், விநாயகரும் இந்த வருடம் missing. கும்மிடுதனம் தடை செய்யப்பட்டது. நான்கு ரத வீதியில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும் தேரோட்டமும் இம்முறை Lite Versionனாக கோயில் வளாகத்திலேயே நடைபெற இருக்கிறது. கடந்த முறை பங்குனிப் பொங்கல் நடைபெறாததால் சென்ற ஆண்டு நேர்த்திக்கடனையும் இந்த ஆண்டு செலுத்தி வருகின்றனர் பக்தர்கள். மாரியம்மன் அருளால் Lite Versionனாகவே இந்த முறை பங்குனிப் பொங்கலை கொண்டாடுவோம். அடுத்த ஆண்டு ஆகோய்... அய்யாகோய்... விண்ணைப் பிளக்க கொண்டாடுவோம். - ஜெப ரா குமார், சிவகாசி |