சிவகாசி தொகுதியில் காங். வேட்பாளா் வெற்றி |
03-05-2021 சிவகாசி தொகுதியில் காங். வேட்பாளா் வெற்றி சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ஜி. அசோகன் 17,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,27,397, பெண்கள் 1,34,135, திருநங்கைகள் 27 என மொத்தம் 2,61,559 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிளைச் சோ்ந்த 26 போ் போட்டியிட்டனா். தோ்தலில், 90,094 ஆண்கள் மற்றும் 93,008 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 1,83,103 போ் வாக்களித்தனா். அதில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ஜி. அசோகன் 78,617 வாக்குகள் பெற்றாா். AMSG Ashokan, Congress - 78,617 Votes Lakshmi Ganeshan, ADMK - 61,436 Votes Kanaga Priya, NTK - 20,810 Votes Samikkalai, AMMK - 9,871 Votes Mugundhan, MNM - 6,069 Votes |