புத்தாக்க பயிற்சி முகாம் |
10-10-2021 புத்தாக்க பயிற்சி முகாம் பெல் ஹோட்டலில் உள்ள செய்னா ஹாலில் வைத்து 29.09.2021 அன்று காலை 10.00மணியளவில் பிரபல புத்தாக்க பயிற்சியாளர் உயர்திரு E.C,ரேமண்ட் அவர்கள் கலந்து கொண்டு பெல் கேட்டரிங் கல்லூரியின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வர் திரு.லியோ ராபர்ட் வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினர் E.C,ரேமண்ட் அவர்கள் மாணவர்களுக்கான மனவளப்பயிற்சியையும் , சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பது எப்படி என்று விளக்கினார். மேலும் மேலாண்மை விளையாட்டுகள், தன்னார்வலர், பயிற்சி தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பது குறித்தும் விளக்கினார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் தங்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் சவால்களை இனி எப்படி எதிர்கொள்வது என்ற பயம் நீங்கியதாகவும் தெரிவித்தனர். மேலும் இது போன்ற தொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் கல்லூரி முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் உதவியோடு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் இரண்டாம் ஆண்டு எம் .பி .ஏ மாணவர் சுதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். |