உலக சுற்றுலா தினம் |
10-10-2021 உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா தினம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் வரவேற்ப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அரசு விதிகளுக்கு உட்பட்டு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுற்று சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்கனவே பல நூறு மரக்கன்றுகளை பராமரித்து வரும் பெல் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக புதிய மாணவர்களையும் கொண்டு பழைய மாணவர்கள் இந்த மரக்கன்றுகளையும் நட்டனர்.இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். சமுதாய பொறுப்புடன் சமத்துவத்தை காத்து இயற்கையை பாதுகாக்கும் வகையில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி முதல்வர் திரு.லியோ ராபர்ட் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். |