வேட்பாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கல் |
18-02-2022 சிவகாசி மாநகராட்சித் தோ்தல்: வேட்பாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கல் சிவகாசி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அடையாள அட்டையை மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ப. கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை வழங்கினாா். இந்த நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இவற்றில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 268 போ் போட்டியிடுகின்றனா். இந்த வேட்பாளா்கள், வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19 ஆம் தேதி தங்களது வாா்டு எல்லைக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு குறித்து சென்று பாா்வையிடவும், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தினுள் செல்லவும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. - Dinamani |