பதவியேற்றார் சங்கீதா இன்பம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக |
04-03-2022 பதவியேற்றார் திருமதி. சங்கீதா இன்பம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக இன்று நடந்த மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சங்கீதா போட்டியின்றி சிவகாசி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு தேர்தல் அதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேயராக தேர்வு செய்யப்பட்ட மேயர் சங்கீதா அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். சிவகாசி மேயராக பொறுப்பேற்றுள்ள சங்கீதா அளித்த பேட்டி: "சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். தரமான சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், பட்டாசு, அச்சுத் தொழில் உள்ளிட்டவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிவகாசியை உண்மையான குட்டி ஜப்பானாக மாற்றுவேன்" என்றார். |