சமையல் வல்லுநர்களின் சமையல் அறை |
01-06-2022 சமையல் வல்லுநர்களின் சமையல் அறை சிவகாசி மாநகரில் உள்ள பெல் கேட்டரிங் கல்லூரியில் 25.05.22 அன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களால் "Chef Ka Rasoi" (சமையல் வல்லுநர்களின் சமையல் அறை) என்ற தலைப்பில் பாரம்பரிய இந்திய உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. மாணவர்கள் சமையல் கலையில் மட்டும் இல்லாமல் கலை, கலாசாரம், பண்பாடு எல்லாவற்றிலும் இந்தியாவின் ஒருமைப்பாடு விளங்கும் விதமாக வடிவமைத்திருந்தனர் . இந்தியாவில் உள்ள சமையல் வல்லுநர்களை கவுரவப்படுத்தும் விதமாக இவ்விழா அமைத்திருந்தது . விழா கண்களுக்கு இதமாகவும், விருந்தாகவும் இந்தியா ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியது . இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கல்லூரி நிர்வாக இயக்குனர் திரு. ராஜாசிங் செல்லதுரை, தாளாளர் திருமதி. பினாராஜாசிங் மற்றும் கல்லூரி முதல்வர் திரு.லியோ ராபர்ட் அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பங்கேற்று இந்திய ஒருமைப்பாட்டினையும், கலாசாரத்தையும் கண்டு கழித்ததுடன் நாட்டின் அனைத்து மாநிலங்களின் உணவுகளையும் ருசித்து மகிழ்ந்தனர். இவ்விழாவை ஏற்பாடு செய்த திரு.தாமோதரன், திரு. சசிகுமார் மற்றும் திரு. யோகராஜ் அவர்களின் மேற்பார்வையில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இணைந்து இவ்விழாவை இனிதே சிறப்பித்தனர். |