SIVAKASI WEATHER
பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம்

10-06-2022
சிவகாசியில் ரூ.15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம்

சிவகாசியில் ரூ.15 கோடி செலவில் அமைய உள்ள பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையத்துக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் நீரி அமைப்பும், பட்டாசு உற்பத்தியாளர்கள் அமைப்பும் கையெழுத்திட்டன. நீரி அமைப்பு பசுமை பட்டாசு தயாரிக்க உரிய அனுமதியை நாக்பூரில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வு கழகத்திடம் (நீரி) பெற வேண்டும். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்தனர். இந்தநிலையில் அனுமதி பெறாத சில பட்டாசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வசதியாக சிவகாசியில் நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒப்பந்தம் அப்போது சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தியாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதியில் ரூ.4½ கோடி சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையும், ரூ.4½ கோடி நீரி அமைப்பும் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்தவர்களும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். இடைத்தரகர்கள் நிகழ்ச்சியில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு பேசுகையில், "பசுமை பட்டாசு தயாரிக்க ரசாயன கலவை சான்றிதழ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பித்து குறுகிய நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்," என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், அபிரூபன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Daily Thanthi

News & Events
top